தாலிபனுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கருத்து மோதல் ? தாலிபன் தலைவரின் ஆடியோ பதிவு ஏற்படுத்திய சர்ச்சை

0 2471

தாலிபனுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக புதிய ஆடியோ பதிவு ஒன்று வெளியாகி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதில் தாலிபன் தலைவர் முல்லா ஃபசேல் அகண்ட் பாகிஸ்தான்தான் ஆப்கானில் எல்லாவற்றையும் அழித்துக் கொண்டிருப்பதாக சாடியுள்ளார்.

அண்மையில் காபூலுக்கு சென்ற ஐ.எஸ்.ஐ. தலைவர் ஹமீத் ஃபையஸ் தாலிபன்களுக்கும் ஹக்கானிக்கும் இடையே சமரச முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தாலிபன்களின் விருப்பத்திற்கு மாறாக ஹக்கானி குழுவைச் சேர்ந்த சிலருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன.

இது குறித்து, ஆப்கானின் எதிர்காலத்தையே நாசம் செய்து விட்டதாக தாலிபன் தலைவர் குறை கூறுவது போல அந்த ஆடியோ பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments