எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று நீட் நுழைவுத் தேர்வு..!

0 2265
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று நீட் நுழைவுத் தேர்வு..!

நாடு முழுவதும் MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

MBBS, BDS, சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு NEET - UG தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) நடத்துகிறது. இந்தியாவிலும், வெளிநாட்டிலும் 13 மொழிகளில் நடைபெறும் நீட் தேர்வை எழுத மொத்தம் 16 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர். 

இந்த ஆண்டு தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 16 விழுக்காடு அதிகரித்துள்ளது. இன்று பகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்த முறை நாடு முழுவதும் கூடுதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான நுழைவுச் சீட்டு அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், நுழைவுச் சீட்டு, அடையாள அட்டை, புகைப்படம் தவிர வேறு எதையும் தேர்வு மையத்துக்குள் எடுத்து செல்ல கூடாது என்று தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தி உள்ளது.

இந்த ஆண்டில், +2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாலும், கடந்த கல்வியாண்டில் பாடத்திட்டம் குறைக்கப்பட்டதாலும் கூடுதல் தெரிவுகளுடன்(Choice) வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments