கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ; கார் ஓட்டுநர் கனகராஜின் நண்பர் குழந்தைவேலு என்பவரிடம் போலீசார் விசாரணை

0 1966
கார் ஓட்டுநர் கனகராஜின் நண்பர் குழந்தைவேலு என்பவரிடம் போலீசார் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கார் ஓட்டுநர் கனகராஜின் நண்பரிடம் சுமார் 5 மணி நேரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். குழந்தைவேலு என்ற அந்த நபர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜுடன் ஒரே அறையில் தங்கி இருந்தவர் என்று கூறப்படுகிறது.

உதகையில் உள்ள பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து மேற்கு மண்டல ஐஜி சுதாகர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் முன்னிலையில் சுமார் 5 மணி நேரம் அவரிடம் விசாரணை நடைபெற்றது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments