தெலங்கானாவில் தொலைதூர இடங்களுக்கு ட்ரோன் மூலம் மருந்து டெலிவரி செய்யும் திட்டம் தொடக்கம்

0 1688
தொலைதூர இடங்களுக்கு ட்ரோன் மூலம் மருந்து டெலிவரி

தெலங்கானாவில் ட்ரோன் மூலம் தடுப்பூசிகள் உள்ளிட்ட மருந்துகள் டெலிவரி செய்யும் Medicine from the sky என்ற திட்டம் நாட்டில் முதன்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்த இந்தத் திட்டம் மூலம், தடுப்பூசிகள், மருந்துகள் உள்ளிட்டவை தொலை தூர இடங்களுக்கு டிரோன் மூலம் டெலிவரி செய்யப்படும்.

முதற்கட்டமாக தெலுங்கானாவில் ட்ரோன் பறக்க தடை இல்லாத 16 பகுதிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். உலக வர்த்தக கூட்டமைப்பு, நிதி ஆயோக், அப்போலோ மருத்துவமனையின் Health net global ஆகியவற்றுடன் இணைந்து விகாரபாத் மாவட்டத்தில் தெலங்கானா அரசு இந்த திட்டத்தை சோதனை அடிப்படையில் செயல்படுத்துகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments