தந்தை கண் முன்னேயே குழந்தைகள் உயிரிழந்த சோகம் ; துக்கம் தாளாமல் தற்கொலை செய்துக் கொண்ட தந்தை

0 3920
துக்கம் தாளாமல் தற்கொலை செய்துக் கொண்ட தந்தை

திருப்பத்தூரில் கோவில் குளத்தில் குளிக்கச் சென்ற இரண்டு குழந்தைகள் தந்தை கண் முன்னேயே நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், துக்கம் தாளாத தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கைலாசகிரி மலை அடிவாரத்தில் வசித்து வந்த லோகேஷ்வரன், தனது 9 வயது மகன் ஜஸ்வந்த் ,7 வயது மகள் ஹரிப்பிரியாவை அழைத்துக்கொண்டு மலை மேல் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் குளத்தில் குளிக்கச் சென்றார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குள் சிக்கி நீந்த முடியாமல் தவித்த குழந்தைகள், தந்தை கண்முன்னேயே நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. குழந்தைகளை கண் முன்னேயே பறிகொடுத்த நிலையில் துக்கம் தாளாத லோகேஷ்வரன், ஆம்பூர் ரயில் நிலையத்தில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்ததாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments