ராஜஸ்தானில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலையே டெல்லியில் கனமழை பெய்யக் காரணம் ; வானிலை ஆய்வு மையம்

0 1882
ராஜஸ்தானில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலையே டெல்லியில் கனமழை பெய்யக் காரணம்

ராஜஸ்தானில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலையே டெல்லியில் கனமழை பெய்ததற்கான காரணம் என்றும், நாளை ஞாயிற்றுக்கிழமை காலை வரை கனமழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் குளம்போல் மழைநீர் தேங்கியது. விமானநிலையத்தின் ஓடுபாதைகளிலும் நீர் தேங்கியதால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மழை பொழிந்துள்ளது. இந்நிலையில் டெல்லி, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தானில் கனமழை நாளைக் காலை வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு ராஜஸ்தானிலும், வங்கக் கடலிலும் உள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை மேலும் வலுப்பெறும் என்றும் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 17, 18 ஆகிய நாட்களில் டெல்லியில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments