ஓசியில் தேநீர் கொடுக்காத ஆத்திரம் - கடையை அடித்து நொறுக்கிய போதை ஆசாமி..!

0 3008

சென்னை அருகே ஓசியில் டீ கொடுக்க மறுத்த ஆத்திரத்தில் கடையை சூறையாடிய போதை ஆசாமி ஒருவன், கடை உரிமையாளரையும் வாடிக்கையாளரையும் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஏகாட்டூரில் ரியாஸ் என்பவர் தேநீர் மற்றும் பழச்சாறகம் நடத்தி வரும் கட்டிடத்திலேயே விக்னேஷ் என்பவனும் பெட்டிக்கடை வைத்துள்ளான். அவ்வப்போது ரியாசின் கடைக்கு வந்து டீ மற்றும் நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டுச் செல்லும் விக்னேஷ், பணம் தராமல் செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தை கட்டிடத்தின் உரிமையாளரிடம் ரியாஸ் கொண்டு செல்ல ஆத்திரமடைந்த விக்னேஷ், குடிபோதையில் கடைக்கு வந்து, டேபிள், சேர், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவைகளை அடித்து உடைத்து சூறையாடி இருக்கிறான். ரியாஸ், கடை ஊழியர், கடையில் அமர்ந்து தேநீர் அருந்திய வாடிக்கையாளர் என அத்தனை பேரையும் போதையில் அவன் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments