வரதட்சணை வழக்கு.. வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு ஓட்டம்..!

0 4421

பண்ருட்டி அருகே கூடுதல் வரதட்சனை கேட்டு மாற்றுத்திறனாளி பெண்ணை வீட்டிற்குள் அடைத்து சித்ரவதை செய்த புகாருக்குள்ளான 4 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் வீட்டை பூட்டி விட்டு ஓட்டம் பிடித்ததால் அவர்களை தனிப்படை அமைத்து போலீசார் தேடிவருகின்றனர்.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் காதுகேட்காத மாற்றுத்திறனாளி பெண்ணான கஜலட்சுமியை, ஏராளமான வரதட்சனை கிடைக்கும் என்ற ஆசையில்  திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. ஆனால் பேசியபடி வரதட்சனை கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறி கூடுதல் வரதட்சனை கேட்டு மனைவி கஜலட்சுமியை தனி அறையில் அடைத்து துன்புறுத்தியதாக பண்ருட்டி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் புகாரை வாபஸ் பெறக்கூறி சீனிவாசனின் சகோதரி கணவர் காசிலிங்கம் என்பவர் கூலிப்படையினருடன் சென்று கஜலட்சுமி வீட்டில் தாக்குதல் நடத்திவிட்டு காரில் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகளின் ஆதரங்களும் போலீசிடம் அளிக்கப்பட்டது.

கஜலட்சுமி அளித்த புகாரின் பேரில்  கணவர் சீனிவாசன், கணவரின் சகோதரிகள் சியாமளா, விமலா, புவனா, தாய் லட்சுமி, கூலிப்படை அழைத்துச்சென்று தாக்கிய புகாருக்குள்ளான சியாமளா கணவர் காசிலிங்கம் உள்ளிட்ட ஆகிய 6 பேர் மீது கொலை மிரட்டல், வரதட்சனை கொடுமை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன்ஜாமீன்  பெற்று கைதாவதில் இருந்து தப்பிக்கும் திட்டத்தில், தனது கிராமத்தில் தலைமறைவாக உள்ள காசிலிங்கம் என்பவர் கஜலெட்சுமியுடன் அவரது குழந்தையே செல்ல மறுத்ததாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டதோடு , தங்களை விசாரிக்காமல் வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் மீது  நடவடிக்கை எடுக்க இருப்பதாக தெரிவித்தார்.

இதற்கிடையே வரதட்சனை கொடுமை வழக்கு பதிவுசெய்யப்பட்டது தெரிந்ததும், சீனிவாசனும், அவரது சகோதரிகளும், காசிலிங்கமும் குடும்பத்துடன் அவரவர் வீட்டை பூட்டி விட்டு தப்பி ஓடி விட்டதாகவும். தலைமறைமாக இருக்கும் அவர்களை தனிப்படை அமைத்து தேடிவருவதாகவும் காவல் ஆய்வாளர் வள்ளி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments