நடிகர் விஜயின் ஜாதிச் சான்றிதழில் தமிழர் என்று தான் உள்ளது - எஸ்.ஏ.சி

0 5298

தனது மகன் விஜய்யை நான்கு வயதில் பள்ளியில் சேர்ப்பதற்கு ஜாதி பார்க்கப்பட்டதாகவும், இன்றுவரை நடிகர் விஜய்யின் ஜாதிச் சான்றிதழில் தமிழர் என்று தான் உள்ளதாகவும் இயக்குர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.

‘சாயம்’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கதாநாயகன் அபி சரவணன், மூத்த இயக்குநர்கள், திரைத்துறை ஜாம்பவான்கள் இருக்கும்போது, நட்புக்காக அழைத்துவரப்பட்ட நடிகை சாஷ்வி மேடையில் கால் மீது கால் போட்டு அமர்வது சரியல்ல என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், ஜாதி, மதம் சினிமாவில் மட்டும்தான் இல்லை என்றார். 40 ஆண்டுகளுக்கு முன்னால் தனது மகன் விஜயை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் சேர்க்க சென்றபோது, ஜாதி மதம் குறிப்பிட வேண்டிய இடத்தில் தமிழன் என்று எழுதியதாக கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments