கோவில் வாசலில் கிடந்த துப்பாக்கியை எடுத்து குழந்தைகள் விளையாடியதால் பதற்றம்..!

0 2714

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த ஆளிப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் வாசலில் துப்பாக்கி கிடந்ததால் அப்பகுதியில் சிறிதுநேரம் பதற்றம் நிலவியது.

கோவில் வாசலில் கிடந்த துப்பாக்கியை எடுத்து குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ந்த ஊர்மக்கள் அளித்த தகவலின்பேரில் மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, துப்பாக்கி, அங்கிருந்த சிறிய அளவிலான பால்ரஸ்(Ballras) எனப்படும் இரும்பு குண்டுகள் மற்றும் துப்பாக்கி உறையை கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.

இதனிடையே, துப்பாக்கியை ஆய்வு செய்த திருச்சி துப்பாக்கி பழுதுநீக்கும் குழுவினர், அது ஏர்கன்(Airgun) எனவும், குருவி சுடுவதற்கு பயன்படுத்தி இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments