பனியன் கம்பெனியில் வேலை, பார்ட் டைமாக சங்கிலி பறிப்பு.. வசமாக சிக்கிய பல்சர் திருடர்கள்..!

0 4131

திண்டுக்கல்லில் பெண்ணிடம் 4 பவுன் தங்க செயினை பறித்து, பல்சர் பைக்கில் தப்பிச் சென்ற வீடியோ வைரலான நிலையில், வழிப்பறிக் கொள்ளையர்கள் திருப்பூரில் போலீசாரிடம் சிக்கினர்.

கடந்த வாரம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பைக்கில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 4 பவுன் சங்கிலியை பல்சார் பைக்கில் வந்த 3 பேர் பறித்துச் சென்றனர். அவர்கள் பைக்கில் தப்பிச் செல்வதை, அவ்வழியே காரில் வந்தவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், திருப்பூர் பங்களா பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம், கடந்த ஜூலையில் சங்கிலியை பறித்த சம்பவம் தொடர்பாக, திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த அலெக்ஸ் பாண்டி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. கடந்த வாரம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் அவர்கள்தான் என தெரியவந்துள்ளது.

இவர்களின் மற்றொரு கூட்டாளியான உதயமூர்த்தி என்பவனை, அனுப்பர்பாளையம் போலீசார் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் கைது செய்துள்ளனர்.

பனியன் நிறுவனங்களில் தொழிலாளர்களாக வேலை செய்யும் இவர்கள், இருசக்கர வாகனங்களை திருடி திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். பனியன் நிறுவனங்களில் அறிமுகமில்லாதவர்களை பணிக்கு சேர்க்கும் பொழுது, பின்புலத்தை சரிபார்க்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments