தமிழகத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம் ; ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்

0 2910
ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டம்

தமிழகத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்ட பகுதிகள், 18 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மூத்த குடிமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை மாவட்டம் வாரியாகத் தேர்வு செய்து தடுப்பூசி முகாம்களை அமைக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் நாளை 43,051 இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைத்து ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments