குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா

0 2562
குஜராத் முதலமைச்சர் ராஜினாமா

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார். காந்தி நகரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவர், ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத்திடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2016ஆம் ஆண்டு முதல் முதலமைச்சராக பணியாற்ற வாய்ப்பு வழங்கியதற்காக பாஜக தலைமைக்கு நன்றி தெரிவித்தார். திடீரென ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று செய்தியாளர்கள் வினவியபோது, 5 ஆண்டுகள் முதலமைச்சராக பணியாற்றிவிட்டதாகவும், நீண்ட காலம் பதவி வகித்து விட்டதால் முதலமைச்சர்களை மாற்றுவது பாஜகவில் இயல்பான நிகழ்முறைதான் என ரூபானி பதிலளித்தார்.

அண்மையில் கர்நாடக முதலமைச்சராக இருந்த எடியூரப்பா, உத்தரகாண்ட் முதலமைச்சராக இருந்த  தீரத் சிங் ராவத் ஆகியோரைத் தொடர்ந்து மூன்றாவதாக குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி ராஜினாமா செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments