46 ஆண்டுகளில் இல்லாத மழை - வெள்ளக்காடாக மாறிய சாலைகள்

0 2354
46 ஆண்டுகளில் இல்லாத மழை - வெள்ளக்காடாக மாறிய சாலைகள்

டெல்லியில் 46 ஆண்டுகளில் இல்லாத மழை பொழிந்துள்ள நிலையில், இந்திரா காந்தி விமான நிலையத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் மிதக்கிறது.

நடப்பு பருவமழைக் காலத்தில் டெல்லி இதுவரை 1100 மில்லிமீட்டர் அளவுக்கு மழைப்பொழிவை பெற்றுள்ளது. இன்றும் கனமழை தொடரும் நிலையில், டெல்லியில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் வெள்ளக்காடாக மாறின.

மோட்டி பாக் , ஆர்.கே.புரம், மது விஹார், ஜோர்பாக் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையால் சாலைகளில் நீர் தேங்கியது. வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்ற காட்சிகளும், பேருந்துகள் நகர முடியாமல் சிக்கி நின்ற காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இதனிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம், மிதமானது முதல் கனமழை வரை தொடரும் என டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments