ஆட்டை கொடூரமாக பலி கொடுத்து 'அண்ணாத்த' கொண்டாட்டம்.. ரசிகர்கள் கொடூர செயல்..!

0 2883

அண்ணாத்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டை கொண்டாடும் விதமாக ரஜினி ரசிகர்கள், ஒரு ஆட்டின் தலையை கொடூரமாக வெட்டி பலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணாத்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை பேனராக வைத்து அதன் முன்பு மேள தாளம் முழங்க விசிலடித்து உற்சாகமடைந்த ரசிகர்கள், ஒரு ஆட்டின் தலையை வெட்டி பலிகொடுத்து அதன் ரத்தத்தை பேனரில் இருந்த ரஜினியின் படத்தின் மீது தெளித்தனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற இடம் எங்கு என தெரியாத நிலையில், இந்த ஈவு இரக்கமற்ற செயலுக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இப்படி ஆட்டை கொடூரமான முறையில் பலி கொடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments