பசுவதை செய்வோர் மீதும், இந்துப் பெண்களைக் காதல் வலையில் வீழ்த்துவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - குஜராத் முதலமைச்சர்

0 5327

பசுவதை செய்வோர் மீதும், இந்துப் பெண்களைக் காதல் வலையில் வீழ்த்துவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி எச்சரித்துள்ளார்.

அகமதாபாத்தில் கால்நடை வளர்ப்பைத் தொழிலாகக் கொண்ட மால்தாரி சமூகத்தினரின் கூட்டத்தில் பேசிய அவர், பசுக்களைக் காக்கவும், நிலப்பறிப்பு, சங்கிலிப் பறிப்பில் ஈடுபடுவோரைத் தண்டிக்கவும் சட்டங்கள் உள்ளதாகத் தெரிவித்தார்.

இந்துப் பெண்களைக் காதல் வலையில் வீழ்த்துவதைத் தடுக்க ஒரு சட்டம் கொண்டுவந்துள்ளதாகவும், அதைக் கடுமையாக நடைமுறைப்படுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments