சென்னை ராயப்பேட்டையில், வீட்டின் குளியல் அறை ஜன்னலை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை

0 1569

சென்னை ராயப்பேட்டையில், வீட்டின் குளியல் அறையின் ஜன்னலை உடைத்து, நகை, பணம் மற்றும் வீட்டு பொருட்களை கொள்ளையடித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராயப்பேட்டை அங்கமுத்து தெருவை சேர்ந்த முகமது சலீம், நேற்று மாலை குடும்பத்தோடு வெளியே சென்று விட்டு, வீடு திரும்பிய நிலையில், கதவு உள் தாழிட்டு இருந்ததால், போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

போலீசார் வீட்டின் கதவை உடைத்து சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 13 சவரன் நகை, 2000 ரூபாய் பணம், லேப்டாப், மிக்சி உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றியிருப்பது தெரிய வந்தது.

அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அதே பகுதியை சேர்ந்த காந்தா, உசேன் நதீம் பாஷா பில்லி, சமியுல்லா ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments