கையெழுத்திட ரூ.200..? வெளியான வி.ஏ.ஓ.,வின் லஞ்சம் வாங்கும் வீடியோ

0 33019

கன்னியாகுமரி அருகே கிராம நிர்வாக அலுவலக பெண் உதவியாளர் ஒருவர் கட்டுமான நலவாரிய சான்றிதழில் கையெழுத்திட 200 ரூபாய் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்த தம்பதி கட்டுமான நலவாரிய உறுப்பினர் சேர்க்கைக்காக, ஏழுதேசம் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு தற்காலிக அலுவலக உதவியாளராக பணியாற்றிய பெண், ஒரு சான்றிதழில் கையெழுத்திட 100 ரூபாய் வீதம் 200 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மனைவியிடம் 200 ருபாயை கொடுத்து அனுப்பிய கணவர், மனைவியை பின்தொடர்ந்து சென்று பெண் உதவியாளர் ரூபாயை வாங்குவதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments