விநாயகர் சிலையை கரைப்பதற்காக சென்ற போது கால்வாயில் விழுந்து 2 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

0 3254

திருவள்ளூர் அடுத்த செவ்வாபேட்டையில், விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக கிருஷ்ணா நதிநீர் இணைப்பு கால்வாய்க்கு சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள், கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தனர்.

சிறுகடல் பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவன் ஷ்யாம் விக்னேஷ் மற்றும் 7-ம் வகுப்பு மாணவன் மோனிஷ் உள்ளிட்ட 4 பேர், கிருஷ்ணா நதிநீர் இணைப்பு கால்வாய்க்கு அருகே கிடந்த விநாயகர் சிலைகளை எடுத்து கால்வாயில் கரைக்க சென்றுள்ளனர்.

அப்போது கால் தவறி கால்வாயில் விழுந்த ஷ்யாம் விக்னேஷ், மற்றும் மோனிஷ் இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தீயணைப்பு வீரர்கள் நள்ளிரவு வரை தேடியும் இருவரும் கிடைக்காத நிலையில்,  பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்ட பின் சிறுகடல் பகுதியில் இருவரும் சடலமாக மீட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments