ஆஸ்திரேலியாவில் முகக்கவசம் அணியாதவரை குற்றவாளி போல நடத்திய போலீசார்... பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

0 1283

ஆஸ்திரேலியாவில் பொது இடத்தில் முகக்கவசம் அணியாதவர்களை போலீசார் தாக்குவதற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

அந்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சிட்னி நகரின் மேற்குப் பகுதியில் மருத்துவ அவசரத்திற்காக முகக்கவசம் அணியாமல் வந்த ஒருவரை சுற்றி வளைத்த போலீசார் அவருக்கு கைவிலங்கிட்டு கடும் குற்றவாளியைப் போல நடத்தினர்.

போலீசாரின் இந்தச் செயலுக்கு அங்கிருந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அந்த நபருக்கு இதய நோய் மற்றும் வலிப்பு நோய் இருப்பதாகக் கூறியும் போலீசார் அவரை விடுவிக்கவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments