திருமண வரவேற்பில் நடனமாடுவதில் தகராறு.. 3 பேருக்கு கத்திக் குத்து, 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு

0 13458

சென்னை தண்டையார்பேட்டையில் திருமண வரவேற்பில் நடனம் ஆடும் போது ஏற்பட்ட தகராறில் மூன்று பேரை கத்தியால் வெட்டியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தனியார் மண்டபத்தில் நடந்த திருமண வரவேற்பில் நடனமாடுவதில் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டதாகவும், மது போதையில் இருந்த ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பை சேர்ந்த தினேஷ், யுவராஜ், ஹேமந்த ஆகியோரை கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து அறிந்து வந்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட ஆகாஷ், ஜான் உள்ளிட்ட 4 பேரை சிசிடிவி காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments