இருசக்கர வாகன விபத்தில் நடிகர் சாய் தரம் தேஜ் படுகாயம்-சுயநினைவு இழப்பு

0 4381

ஹைதராபாதில் பைக் விபத்தில் சிக்கிய தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹைதராபாத், மாதாப்பூரில் உள்ள கேபிள் பாலத்தில் நேற்றிரவு தமது ஸ்போர்ட்ஸ் பைக்கில் அவர் படு வேகமாக சென்றுக்கொண்டு இருக்கும் போது பைக் சறுக்கியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விபத்துக்கான காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர்.

தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சாய் தரம் தேஜ் உடல்நிலை குறித்து நடிகர்கள் சிரஞ்சீவி , பவன் கல்யாண், அல்லு அர்ஜூன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று கேட்டறிந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments