அமைதியான ஊருக்குள் கலகம் விளைவித்ததாக நித்தியின் சீடர்கள் கைது..!

0 3693

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த  பட்டணம் முனியப்பம்  பாளையத்தில் குடும்ப பெண் ஒருவரை ஆசிரமத்தில் சேர்த்து சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டதாக கூறி நித்தியின் சீடர்களின் கார் மறிக்கப்பட்ட சம்பவத்தில்  நித்தியானந்தாவின்  சீடர்கள் மூவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் முனியப்பன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி இவரது மனைவி அத்தாயி இவர்களுக்கு பழனிசாமி என்ற மகன் உள்ளான்.

அத்தாயி கடந்த 5வருடமாக நித்தியானந்தர் ஆசிரமத்தில் இருந்துவந்தார். இந்நிலையில் வங்கியில் உள்ள கடன் தொடர்பாக கையெழுத்து இடுவதற்காக ராமசாமி பலமுறை நேரில் சென்றும் கேட்டுக் கொண்டதன் பேரில் சில தினங்களுக்கு முன்பு பெங்களுரிலிந்து அத்தாயியை நித்தியின் சீடர்கள் காரில் அழைத்து வந்தனர்.

நித்தியின் சீடர்கள் 5பேர் பட்டணம் முனியப்பன்பாளையம் பகுதிக்கு காரில் வந்தபோது அங்கிருந்த அத்தாயி கணவர் மற்றும் மகன் ஆகியோர் உறவினர்களுடன் சூழ்ந்துகொண்டு தகராறு செய்து அத்தாயியை தங்களது காரில் ஏற்றி மீட்டுச் சென்றனர். இதையடுத்து இரு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் பரபரப்பான சூழல் உருவானது.

இரு தரப்பிலும் புகாரை பெற்று விசாரித்த நாமகிரிபேட்டை காவல்துறையினர் அத்தாயியின் கணவர் ராமசாமி அவரது மகன் பழனிச்சாமி மற்றும் நித்தியானந்தாவின் சீடர்கள் அகிலாராணி, சதீயா,ஜெயகிருஷ்ணா உள்ளிட்ட 5 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அமைதியான ஊருக்குள் அடிதடியில் ஈடுபட்டு வீணான கலவரசூழலை உருவாக்கியதாக இருதரப்பு மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments