முல்லா பராதருக்கு பாஸ்போர்ட் வழங்கிய பாகிஸ்தான்... தாலிபனுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள ரகசிய உறவு அம்பலம்..!

0 6432

ஆப்கானில் அமைய உள்ள புதிய தாலிபன் அரசின் துணைப் பிரதமராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் முல்லா பராதருக்கு பாகிஸ்தான் அரசு பாஸ்போர்ட் வழங்கியது அம்பலமாகியுள்ளது .

இத்தனை காலமாக பாகிஸ்தான் மறுப்பு கூறி வந்த நிலையில் தாலிபன்களுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள ரகசிய உறவு அம்பலமாகும் வகையில் முல்லா பராதாரின் பாஸ்போர்ட் விவரங்கள் வெளியாகியுள்ளன.GF680121 என்ற சீரியல் நம்பர் கொண்ட பாஸ்போர்ட்டை பாகிஸ்தான் அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை .10 ஆம் தேதி வழங்கியுள்ளது.

பல்வேறு தாலிபன் தலைவர்கள் பாகிஸ்தான் பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டைகளை வைத்திருப்பதும் இதன் மூலம் தெளிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments