அடுத்த 12 மணிநேரத்தில் கன மழை... டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

0 1841

டெல்லியில் கனமழை காரணமாக, பல்வேறு பகுதிகளில் சாலைகள் வெள்ளக்காடாக மாறின.

மோட்டி பாக் ((Moti Bagh)), ஆர்.கே.புரம், மது விஹார், ஜோர்பாக் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையால் சாலைகளில் நீர் தேங்கியது. வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்ற காட்சிகளும், பேருந்துகள் நகர முடியாமல் சிக்கி நின்ற காட்சிகளும் வெளியாகியுள்ளன.

வாகனங்கள் மெதுவாக செல்லும் நிலை ஏற்பட்டதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனிடையே, டெல்லியில் மிதமானது முதல் கனமழை வரை தொடரும் எனக்கூறி ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments