மாஸ்க் அணியாததற்கு வாக்குவாதம்.! - எஸ்.ஐ.யை தெறிக்கவிட்ட ஓட்டுநர்.!

0 5041
மாஸ்க் அணியாமல் வந்த வாகன ஓட்டிக்கு அபராதம் விதித்த எஸ்.ஐ, சரியாக மாஸ்க் அணியாததை சுட்டிக்காட்டி, ஓட்டுநர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாஸ்க் அணியாமல் வந்த வாகன ஓட்டிக்கு அபராதம் விதித்த எஸ்.ஐ, சரியாக மாஸ்க் அணியாததை சுட்டிக்காட்டி, ஓட்டுநர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான சைனகுண்டா வாகன சோதனைச் சாவடியில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

பைக், மற்றும் நான்கு சக்கர வாகனங்களில், மாஸ்க் அணியாமல் வருபவர்களை தடுத்து நிறுத்தி, காவல் உதவி ஆய்வாளர் வேலாயுதம் என்பவர், அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது, நான்கு சக்கர சிறிய ரக கனரக வாகனமான டாடா ஏசில் வந்த ஓட்டுநர் ஒருவரை தடுத்து நிறுத்திய எஸ்.ஐ வேலாயுதம், மாஸ்க் அணியவில்லை எனக்கூறி அபராதம் விதிக்க முனைந்தார். அப்போது, முதலில் பம்மிய ஓட்டுநர், பிறகு சுதாரித்தவாறு, எஸ்.ஐ சரியாக முகக்கவசம் அணியாததை சுட்டிக்காட்டி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments