தாயின் திருமணத்துக்கு தாலியை எடுத்து கொடுத்த மகன்..! பேராசிரியைக்கு 2ஆவது டும்..! டும்..!

0 19883
மதுரையில் கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்த பேராசிரியை ஒருவர், தனது 9 வயது மகன் தாலி எடுத்துக் கொடுக்க 2ஆவதாக, திரைப்படத்துறையை சேர்ந்த ஓவியரை, பெருமாள் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

மதுரையில் கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்த பேராசிரியை ஒருவர், தனது 9 வயது மகன் தாலி எடுத்துக் கொடுக்க 2ஆவதாக, திரைப்படத்துறையை சேர்ந்த ஓவியரை, பெருமாள் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியைச் சேர்ந்தவர் சுபாஷினி ராஜேந்திரன். கல்லூரி ஒன்றில் ஆங்கிலத்துறை பேராசிரியையாக பணிபுரிந்து வரும் சுபாஷினி, தனது முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு கரணமாக, அவரிடம் இருந்து சட்டப்படி விவாகரத்து பெற்று தனது 9 வயது மகனுடன் தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் திரைப்படத்துறையில் ஓவியராக பணிபுரிந்துவரும், மதுரை திருமங்கலத்தை சேர்ந்த ஆதிசும், சுபாஷினி ராஜேந்திரனும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி, சுபாஷினியின் 9 வயது மகன் தாலி எடுத்துக் கொடுக்க, இருவரது குடும்பத்தினர் முன்னிலையில் திருமங்கலத்திலுள்ள பெருமாள் கோவிலில் வைத்து ஓவியர் ஆதீஷ், சுபாஷினி கழுத்தில் தாலி கட்டினார்.

இருவரது நண்பர்களும் விசில் அடித்தும் கைதட்டியும் உற்சாகப்படுத்தினர். பின்னர் நண்பர்களையே தங்களது உறவினர்களாகக் கொண்டு மாலை மற்றும் மெட்டி அணிவித்து திருமணம் செய்து கொண்டதோடு, பெரியார் சிலைக்கு முன்பாக நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

தனது மகன் கையால் தாலி எடுத்துக் கொடுக்க அதனை 2 வது கணவன் மூலம் கழுத்தில் கட்டிக் கொண்ட பேராசிரியை சுபாஷினியையும், மணமகன் ஆதிஸையும் நண்பர்கள் பாராட்டியதோடு சிறுவன் தாலி எடுத்துக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments