பேருந்து ஓட்டுநருக்கு திடீர் நெஞ்சு வலி.. பயணிகளுக்கு ஆபத்தின்றிச் சாலையோரம் நிறுத்திய ஓட்டுநர்.. மருத்துவமனையில் சேர்த்த காவல் உதவி ஆய்வாளர்

0 4299
சென்னையில் மாநகரப் பேருந்து ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்துப் பயணிகளுக்கு ஆபத்து இல்லாமல் அவர் பேருந்தைச் சாலையோரம் நிறுத்தினார். அவரைத் தனது வாகனத்தில் ஏற்றித் தக்க சமயத்தில் கொண்டு சென்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்த காவல் உதவி ஆய்வாளரை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

சென்னையில் மாநகரப் பேருந்து ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்துப் பயணிகளுக்கு ஆபத்து இல்லாமல் அவர் பேருந்தைச் சாலையோரம் நிறுத்தினார். அவரைத் தனது வாகனத்தில் ஏற்றித் தக்க சமயத்தில் கொண்டு சென்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்த காவல் உதவி ஆய்வாளரை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

வியாழன் மாலை பூவிருந்தவல்லியில் இருந்து திருவொற்றியூர் நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்தை ஏழுமலை ஓட்டி வந்தார். பச்சையப்பன் கல்லூரி அருகே பேருந்து வந்த போது ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் பயணிகளுக்கு ஆபத்தில்லாமல் சாலையோரமாகப் பேருந்தை நிறுத்திவிட்டு மயக்கமடைந்தார்.

பேருந்து ஆபத்தான முறையில் இடமும் வலமும் வளைந்து சென்றபோதே அதைக் கண்ட காவல் உதவி ஆய்வாளர் யஹியா விரைந்து அங்குச் சென்றார். இருக்கையில் மயங்கிக் கிடந்த ஓட்டுநர் ஏழுமலையைத் தனது ரோந்து வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையை நோக்கி விரைந்தார்.

ரோந்து வாகனத்தைக் கார்த்திகேயன் ஓட்டிச் சென்ற போதே அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருந்தவர்களுக்குச் செல்பேசியில் நிலைமையைத் தெரிவித்தார் யகியா. பத்து நிமிடத்துக்குள் ஓட்டுநர் ஏழுமலையை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோது அங்குத் தயார் நிலையில் இருந்த மருத்துவர்கள் அவருக்கு உடனடியாகச் சிகிச்சை அளித்தனர். அவருக்கு ஏற்கெனவே மாரடைப்பு ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை செய்திருப்பதும், மீண்டும் இலேசான மாரடைப்பு வந்ததால் மயக்கமடைந்தும் தெரியவந்தது.

தக்க சமயத்தில் காவல் உதவி ஆய்வாளர் யஹியா விரைந்து செயல்பட்டு அவரை மீட்டு வந்ததால் ஏழுமலையைக் காப்பாற்ற முடிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காவல்துறை உதவி ஆய்வாளர் யஹியாவின் இந்த மனிதநேயச் செயலை உயர் அதிகாரிகள் பெரிதும் பாராட்டியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments