9/11 நியூ யார்க் தாக்குதல்- எப்படித் தப்பினர் சிலர்?

0 2933
20 ஆண்டுகளுக்கு முன்னர் செப்டம்பர் 11 ஆம் நாளன்று நியூ யார்க் உலக வர்த்தக மையத்தை அல் கொய்தா தீவிரவாதிகள் 2 விமானங்களை கொண்டு தாக்கினர். அதில் பலர் கொல்லப்பட்டு, வரலாற்றின் பக்கங்களில் கறுப்பு அத்தியாயமாக இருக்கும் அந்த சம்பவத்தில் சிலர் சாதுர்யமாக உயிர் பிழைத்தனர்.

20 ஆண்டுகளுக்கு முன்னர்  செப்டம்பர் 11 ஆம் நாளன்று நியூ யார்க் உலக வர்த்தக மையத்தை அல் கொய்தா தீவிரவாதிகள் 2 விமானங்களை கொண்டு தாக்கினர். அதில் பலர் கொல்லப்பட்டு, வரலாற்றின் பக்கங்களில் கறுப்பு அத்தியாயமாக இருக்கும் அந்த சம்பவத்தில்  சிலர் சாதுர்யமாக உயிர் பிழைத்தனர். 

சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு… செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி.... அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல்களை நடத்தும் திட்டத்துடன் அல் கொய்தா தீவிரவாதிகள் 4 பயணியர் விமானங்களை கடத்தினர். அதில் 2 விமானங்களை நியூ யார்க் உலக வர்த்த மையத்தின் மீது மோதி வெடிக்க செய்தனர். 3 ஆவது விமானம் வாஷிங்டனில் உள்ள ராணுவ தலைமையகமான பென்டகன் மீது மோதியது.

4 ஆவது விமானம் பென்சில்வேனியாவில் தரையில் மோதியது. இந்த தாக்குதல்களில் சுமார் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அதே நேரம் அந்த சோகத்திற்கும் நடுவே பலர் சாதுர்யமாக உயிரும் தப்பினர்.இரட்டைக் கோபுரம் சரிந்து விழுந்த நேரத்தில் அவர்கள் எப்படி தைரியத்துடன் தப்பினர்?

அமெரிக்க கட்டிடங்கள் மற்றும் தீ பாதுகாப்பு புலனாய்வின் படி, இரட்டை கோபுரங்களில், விமானங்கள் மோதிய இடத்திற்கு கீழ் இருந்த மாடிகளில் இருந்தவர்கள் பலர் உயிர் பிழைத்துக் கொண்டனர். அதற்கு மேல் உள்ள மாடிகளில் இருந்தவர்கள் உயிர்பிழைத்தது லாட்டரி அடித்ததை போன்றது என்றே செல்ல வேண்டும். இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்ட அந்த குழப்பமான நேரத்தில் பலர் உயிர் தப்ப ஓடினர். அதே நேரம் அவர்களை மீட்கவும் பலர் வந்தனர்.

இந்த 2 சம்பவங்களில் இருந்தும் இது போன்ற சமயங்களில் உயிர் தப்ப லிப்டுகளை பயன்படுத்தினால் அவை அதிவேகமாக கீழே சென்று விழவோ, இடிபாடுகளில் சிக்கி விடவோ கூடும். எனவே படிக்கட்டுகளை பயன்படுத்துவது தான் உயிரை காப்பாற்ற உதவும் என்பது மீண்டும் ஒருமுறை இந்த சம்பவங்களால் உறுதியானது. படிக்கட்டுகள் உறுதியான பீம்களை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும் என்பதால் அவை உடைந்து விழுவதற்கு முன்னர் தப்பி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கட்டிட விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டால் ஷர்ட் அல்லது கிடைக்கும் ஒரு துணியால் வாயையும், மூக்கையும் மூடினால் புகை, தூசி போன்றவற்றை சுவாசிக்கும் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம். அதே போன்று அருகில் யாரும் இல்லாத நிலையில் கூவி கூவி உதவி கேட்பதால் அந்த நெருக்கடியான நேரத்தில் தளர்ந்து போகக்கூடிய வாய்ப்புகள் தான் அதிகம் என்பதால் நிதானமாக இருக்க வேண்டும்.

கடைசியாக இன்னொரு சம்பவம். இந்த விபத்தில் 64 ஆவது மாடியில் இருந்த பாஸ்குலே புஸ்ஸெல்லி என்ற எஞ்சினியர் அவசர கால எண்ணை அழைத்த போது காத்திருக்குமாறு அவருக்கு பதில் வந்தது. ஆனால் விரைவில் அங்கிருந்து வெளியேறாவிட்டால் இடிபாடுகளில் சிக்கி இறப்பது நிச்சயம் என்ற எண்ணம் வந்ததால் அவரது பார்வை படிக்கட்டுகளை நோக்கி சென்றது. அங்கு தீப்பிடித்த அடையாளம் ஏதும் இல்லை. எனவே தம்முடன் 10 க்கும் மேற்பட்டவர்களை அழைத்துக் கொண்டு அவர் படிக்கட்டில் இறங்கத் துவங்கினார்.

22 ஆவது மாடியில் வந்த போது, கட்டிடம் ஆடுவதை அவர்கள் உணர்ந்தனர். உடனே அந்த தளத்தின் மூலையை நோக்கி அவர் பாய்ந்தார். அப்போது மேலிருந்து கட்டிடம் இடிந்து விழுவதை உணர்ந்து மயங்கிய அவர் 2 மணி நேரத்திற்குப் பிறகு கண்விழித்து பார்த்தபோது கட்டிட இடிபாடுகளின் மேல் கிடப்பதை தெரிந்து கொண்டார். அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டாலும் மீட்பு பணியாளர்கள் அவரை பத்திரமாக அழைத்து சென்றனர். அதாவது 15 மாடிகளை தாண்டி அவர் சறுக்கி வந்துள்ளார். அவருக்கு 9/11 Surfer என்ற பட்டப்பெயரும் கிடைத்து விட்டது.

இரட்டை கோபுர தாக்குதலின் போது பலர் ஆபத்தான கட்டத்தில் இருந்த போது அவர்கள் மற்றவர்களையும் காப்பாற்ற முடிவு செய்தனர். அந்த முயற்சியில் பலர் உயிரிழந்தனர். ஆனால் அவர்கள் என்றென்றும் ஹீரோக்களாக நினைவில் நிற்கின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments