ஓடும் பேருந்தில் பயணியிடம் "பிக் பாக்கெட்" அடிக்க முயன்ற திருடன்... தப்பியோட முயன்று போக்குவரத்துக் காவலரிடம் சிக்கிய சம்பவம்..

0 3076
திருப்பூரில் ஓடும் பேருந்தில் பயணியரிடம் பிக்பாக்கெட் அடிக்க முயன்றபோது சக பயணியரிடம் சிக்கிய திருடன் கத்தியைக் காட்டி மிரட்டி தப்பியோட முயன்று, போக்குவரத்துக் காவலரிடம் சிக்கினான்.

திருப்பூரில் ஓடும் பேருந்தில் பயணியரிடம் பிக்பாக்கெட் அடிக்க முயன்றபோது சக பயணியரிடம் சிக்கிய திருடன் கத்தியைக் காட்டி மிரட்டி தப்பியோட முயன்று, போக்குவரத்துக் காவலரிடம் சிக்கினான்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்ற நகரப் பேருந்தில் அனீஷ்குமார் என்பவரிடம் பிக்பாக்கெட் அடிக்க முயன்ற திருடன், அவர் சுதாரித்துக் கொண்டதும் கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளான்.

சக பயணிகள் அவனைப் பிடிக்க முயன்றபோது அவர்களிடமும் கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு தப்பிக்க முயன்ற திருடனை அங்கு பணியிலிருந்த போக்குவரத்துக் காவலர் விக்னேஸ்வரன் என்பவர் விரட்டிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல்துறை துணை ஆணையர் ரவி அவருக்கு சன்மானம் வழங்கி பாராட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments