15 வயது சிறுமியை கர்ப்பமாக்கியவனை விடுதலை செய்த திருவள்ளூர் நீதிமன்றம்.. 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்த சென்னை உயர் நீதிமன்றம்..

0 4909
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியவனை விடுதலை செய்த திருவள்ளூர் மகளிர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியவனை விடுதலை செய்த திருவள்ளூர் மகளிர் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

திருவள்ளூரை சேர்ந்த விக்டர் ஜான், பக்கத்து வீட்டிலிருந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியுள்ளான். கரு வளர்ச்சியடைந்ததால் கலைக்க முடியாமல் போய் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

சம்பவம் நடந்த காலத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி 18 வயதுக்கு கீழ் இருந்தார் என்பதை நிரூபிக்கத் தவறியதாக விக்டர் ஜான் உள்ளிட்ட அனைவரையும் திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் விடுதலை செய்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட நிலையில், விக்டர் ஜானுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 2 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments