திருமணமான பெண்ணின் ஆட்சேபனைக்குரிய படங்கள், வீடியோக்களை நீக்க கூகுள், யூடியூப், மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

0 3286
திருமணமான பெண்ணின் ஆட்சேபனைக்குரிய படங்கள், காட்சிகளை இணையத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கும்படி கூகுள், யூடியூப், மத்திய அரசு ஆகியவற்றை டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருமணமான பெண்ணின் ஆட்சேபனைக்குரிய படங்கள், காட்சிகளை இணையத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கும்படி கூகுள், யூடியூப், மத்திய அரசு ஆகியவற்றை டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மார்பிங் செய்யப்பட்ட தனது படங்கள், வீடியோக்களை முடக்க கூகுளுக்கு உத்தரவிடக் கோரி ஒரு பெண் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத், அந்தப் பெண் தொடர்புடைய படங்கள், வீடியோக்களை இணையத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அவ்வாறு நீக்குவதற்கும் அது குறித்து அறிக்கை அளிப்பதற்கும் கால அவகாசம் அளிக்க வேண்டும் என மத்திய அரசின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். அந்தப் பெண் தொடர்பான வீடியோக்கள் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், 10 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டதாகவும் கூகுள், யூடியூப் ஆகியவற்றின் வழக்கறிஞர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments