நீண்ட நேரம் போராடி, ATM-ல் திருட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிய திருடன்!

0 3139
மதுரையில் திருடன் ஒருவன் எஸ்.பி.ஐ, ஏடிஎம் மையத்தின் சிசிடிவி கேமரா மீது வாசனை திரவிய ஸ்ப்ரேவை அடித்துவிட்டு இயந்திரத்தின் லாக்கரைத் திறக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மதுரையில் திருடன் ஒருவன் எஸ்.பி.ஐ, ஏடிஎம் மையத்தின் சிசிடிவி கேமரா மீது வாசனை திரவிய ஸ்ப்ரேவை அடித்துவிட்டு இயந்திரத்தின் லாக்கரைத் திறக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடந்த 8ஆம் தேதி நள்ளிரவில் பெத்தானியாபுரம் பகுதியிலுள்ள அந்த ஏடிஎம் மையத்துக்குள் 25 வயது மதிக்கத்தக்க அந்தத் திருடன் நுழைந்துள்ளான். சிறிது நேரம் சுற்றும்முற்றும் பார்த்தவன், தனது இடுப்புப் பகுதியில் மறைத்து வைத்திருந்த வாசனை திரவிய ஸ்ப்ரேவை எடுத்து, சிசிடிவி கேமரா மீது அடிக்கிறான்.

பின்னர் அங்கிருந்த பேப்பர் ஒன்றை எடுத்து, அதில் ஸ்ப்ரேவை அடித்து நனைத்து கேமரா மீது ஒட்ட முயற்சிக்கிறான். அது ஒட்டாமல் போகவே, அடுத்தகட்ட வேலையில் இறங்கும் திருடன், ஸ்கூரு டிரைவரைக் கொண்டு இயந்திரத்தின் முன் பகுதியைத் திறக்க பெரும் போராட்டம் நடத்துகிறான்.

தனது ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாய்ப் போன நிலையில், அங்கிருந்து நழுவிச் சென்ற திருடனை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments