காவல்துறையினருக்கான ஆணையத்தை 3 மாதங்களில் அமைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

0 1980
ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மூன்று மாதங்களுக்குள் காவல்துறையினருக்கான ஆணையத்தை அமைக்கத் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மூன்று மாதங்களுக்குள் காவல்துறையினருக்கான ஆணையத்தை அமைக்கத் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

காவல்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பவும், ஊதியத்தை உயர்த்தவும் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், காவல்துறையில் காலியாக உள்ள 15 ஆயிரத்து 819 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

காவல்துறையினரின் பணி மகத்தான பணி எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், ஆட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், காவல்துறையினர் மன அழுத்தம் மற்றும் மனஉளைச்சலுடன் பணி செய்து வருவதாகவும் குறிப்பிட்டனர்.

போலீஸாருக்கு குறைந்தபட்சம் 10 சதவீத கூடுதல் ஊதியம் வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். காவல்துறையினருக்கு 8 மணி நேர வேலை முறையை கண்டிப்பாக பின்பற்றவும், 3 ஷிப்ட்டுகளில் பணிபுரிய அனுமதிக்குமாறும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

பணியின்போது காவல்துறையினர் உயிரிழந்தால் 25 இலட்ச ரூபாயும், ஊனமடைந்தால் 15 இலட்ச ரூபாயும் வழங்க உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments