பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தல் - மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல்..

0 2754
மேற்கு வங்கத்தின் பவானிப்பூர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

மேற்கு வங்கத்தின் பவானிப்பூர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக முதலமைச்சர் மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

மேற்கு வங்கச் சட்டமன்றத் தேர்தலில் நந்திகிராமில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோற்றார்.

திரிணாமூல் காங்கிரஸ் இருநூற்றுக்கு மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்ததால் மம்தா முதலமைச்சராகப் பதவியேற்றார்.

முதலமைச்சர் பதவியில் நீடிக்க ஆறு மாதக் காலத்துக்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்பதால் அவர் போட்டியிடுவதற்காகப் பவானிப்பூர் சட்டமன்ற உறுப்பினர் சோவன்தேவ் பதவி விலகினார். அந்தத் தொகுதிக்கு செப்டம்பர் 20ஆம் நாள் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட இன்று மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments