தாமிரபரணி ஆற்றங்கரை.. ஊரையே சூறையாடும் மண் கொள்ளையர்கள்..!

0 2992
ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றுப் படுகையில் அனுமதியின்றி செயல்பட்டுவரும் செங்கல் சூளைகளுக்கு, தடையை மீறி மண் மற்றும் மணல் அள்ளுவது தொடர்வதால், மழை காலத்தில் ஊருக்குள் தண்ணீர் புகுந்துவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றுப் படுகையில் அனுமதியின்றி செயல்பட்டுவரும் செங்கல் சூளைகளுக்கு, தடையை மீறி மண் மற்றும் மணல் அள்ளுவது தொடர்வதால், மழை காலத்தில் ஊருக்குள் தண்ணீர் புகுந்துவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்தோப்புகிராமம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு மழை வெள்ளத்தின் போது இந்த கிராமத்திற்குள் எளிதாக ஆற்று வெள்ளம் புகுந்தது.

இந்த நிலையில் இந்த பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் 10 செங்கல் சூளைகளுக்கு ஆற்றுப் படுகையையொட்டிய தனியாருக்கு சொந்தமான நிலங்களில் இருந்து 15அடி ஆழத்திற்கு சவுடு மண், வண்டல் மண் மற்றும் ஆற்று மணல் ஆகிவற்றை சட்டவிரோதமாக அள்ளும் பணி வேகமாக நடப்பதாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குறிப்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மணல் அள்ள முற்றிலும் தடைவிதித்துள்ள நிலையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கனிமவளங்களை சட்டத்தைமீறி சிலர் கொள்ளையடித்து செல்வதாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் புகார் அளித்தனர்

புகாரை தொடர்ந்து திருட்டுதனமாக செயல்பட்டுவரும் செங்கல் சூளைகளிலும், மண் அள்ளும் இடங்களிலும் ஆய்வு மேற்கொண்ட அந்த பகுதி தாசில்தார், மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அறிக்கை அனுப்பி உள்ளதாக கூறப்படுகின்றது.

மணல் அள்ளுவோர் தொடர்ந்து தங்கள் கைவரிசையை தொடர்வதால், வரும் மழைக்காலத்தில் ஊருக்குள் தாமிரபரணி வெள்ளம் புகாமல் இருக்க இந்த மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த பெரிய அளவிலான போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments