நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்..!

0 1872
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நாட்டின் பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் கோவில்களுக்குச் சென்று பிள்ளையாருக்குச் சிறப்புப் பூசைகள் செய்து வழிபாடு நடத்தியுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நாட்டின் பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் கோவில்களுக்குச் சென்று பிள்ளையாருக்குச் சிறப்புப் பூசைகள் செய்து வழிபாடு நடத்தியுள்ளனர். 

டெல்லி சரோஜினி நகரில் உள்ள சித்திபுத்தி விநாயகர் கோவிலில் பூமாலைகள், மாவிலைகள் கொண்டு தோரணம் கட்டிச் சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கோவிலுக்குச் சென்று வழிபட்டனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாகக் கோவில்களில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் நாக்பூரில் கணேஷ் தேக்தி கோவிலில் காலையில் சிறப்பு ஆரத்தி வழிபாடு நடைபெற்றது. பொதுமக்கள் கோவிலுக்கு வெளியே நின்று வழிபட்டுச் சென்றனர்.

மும்பை பரேலில் லால் பாக் சா ராஜா விநாயகருக்கு நடைபெற்ற சிறப்புப் பூசையில் விழா ஏற்பாட்டாளர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

பெங்களூர் சத்தியகணபதி கோவிலில் நடைபெற்ற பூசையில் பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றிக் கலந்துகொண்டு வழிபட்டனர்.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஒரு பேக்கரியில் சாக்லேட்டைக் கொண்டு பிள்ளையார் சிலையை உருவாக்கியுள்ளனர். சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக விழாக் கொண்டாட்டங்கள் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 2015ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சாக்கோலேட் பிள்ளையாரைச் செய்து வருவதாக பேக்கரி உரிமையாளர் ஹர்ஜிந்தர் சிங் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments