வீட்டில் சட்டவிரோத பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது வெடிவிபத்து ; 7 பேர் படுகாயம்

0 1930
வீட்டில் சட்டவிரோத பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது வெடிவிபத்து

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சட்டவிரோதமாக வீடு ஒன்றில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது வெடிவிபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில், 7 பேர் படுகாயமடைந்தனர்.

தாயில்பட்டியில் பாலமுருகன் என்பவர் தனது வீட்டில் உரிய அனுமதி பெறாமலும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமலும் பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தார் என்று கூறப்படுகிறது. காலை ஊழியர்கள் வழக்கம்போல் பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது திடீரென விபத்து ஏற்பட்டு, பட்டாசுகள் வெடித்துச் சிதறின.

இதில் உரிமையாளர் பாலமுருகன் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர். வீட்டின் மேற்கூரை முற்றாக எரிந்து ஒரு பகுதி சுவரும் இடிந்து விழுந்தது. காயமடைந்த 8 பேரில் 52 வயதான சண்முகராஜ் என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments