காஞ்சி ஜவுளிக்கடை பெண் ஊழியருக்கு ஓடும் காரில் கொடுமை..! வழக்கறிஞர்கள் சிக்கினர்..!

0 4256
காஞ்சி ஜவுளிக்கடை பெண் ஊழியருக்கு ஓடும் காரில் கொடுமை..! வழக்கறிஞர்கள் சிக்கினர்..!


காஞ்சிபுரம் ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வந்த பெண், ஓடும் காரில் வைத்து மது கலந்த குளிர்பானம் கொடுத்து 5 பேர் கொண்ட கும்பலால் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண் அங்குள்ள தனியார் ஜவுளிக் கடையில் ஒன்றில் வேலை செய்து வந்தார். அங்கு வாடிக்கையாக வந்து சென்ற வசதிபடைத்த இளைஞரான குணசீலன் என்பவர் அந்தப் பெண்ணுக்கு காதல் வலை வீசியுள்ளார்.

அந்தப் பெண்ணுக்கு இதைவிட கூடுதல் சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்த குணசீலன், அப்பெண்ணிடம் செல்போன் நம்பரை பெற்றுக் கொண்டதோடு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களின் நண்பராக இணைந்து அந்த பெண்ணுடன் காதல் மொழி பேசியுள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று காதலன் குணசீலன் அந்தப் பெண்ணை தங்களுடைய பூர்வீக சொத்துக்களை பார்த்துவரலாம் என்று மேல்கதிர்பூர் கிராமத்துக்கு தன்னுடைய ஸ்விப்ட் காரில் அழைத்துச் சென்றுள்ளார். அவ்வாறு செல்லும் வழியிலேயே அந்த இளம்பெண்ணுக்கு மது கலந்த குளிர்பானத்தை குடிக்க கொடுத்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை தனது தோட்டத்துக்கு அழைத்துச்சென்று நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது

அந்த வக்கிர கும்பலிடம் இருந்து தப்பிக்க போராடிய அந்த பெண் காரின் கண்ணாடியை ஓங்கி அடித்துள்ளார். இதனை கண்டு விவசாய வேலை செய்துவிட்டு, சென்ற பெண்கள் அங்கு வந்துள்ளனர். இதனை கண்டதும் உஷாரான குணசீலன் கூட்டாளிகளுடன் காரில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளான். தப்பிச் செல்லும் வழியில் அந்த பெண்ணை இறக்கிவிட்டு அந்த கும்பல் தலைமறைவாகியுள்ளது.

பலத்த காயங்களுடன் அந்த இளம்பெண், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலுசெட்டி சத்திரம் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் தன்னை காதலன் குணசீலன் உள்ளிட்ட 5 பேர் கும்பலால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அவர் புகார் அளித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் நேரில் சென்று இச்சம்பவம் குறித்து அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டார்.

அந்தப்பெண் கொடுத்த தகவலின் பேரில் காதலன் போல நடித்த தொழில் அதிபர் குணசீலன், வழக்கறிஞர்கள் ஜெபநேசன் , குணசேகரன், அஜித், ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது கூட்டுபாலியல் பலாத்காரம் உள்ளிட்ட 7 கடுமையான சட்டபிரிவுகளின் கீழ் குற்றவழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. தலைமறைவான காமராஜ் என்பவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெண்கள், தங்களை காதலிக்கும் நபர்களின் பின்னணி குறித்து தெரியாமல் பழகினால் என்னமாதிரியான விபரீதம் நிகழுமென்பதற்கு இந்த சம்பவமும் மற்றொரு சாட்சியாகி இருக்கின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments