நாகை அருகே ஆட்டோவில் 10சவரன் நகையை தொலைத்த மூதாட்டி, போலீசில் நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்

0 2230

நாகையில் ஆட்டோவில் மூதாட்டி ஒருவர் தவறவிட்ட 10 சவரன் நகையை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனரை காவல் கண்காணிப்பாளர் சால்வை அணிவித்து பாராட்டினார்.

வடக்கு பொய்கை நல்லூரை சேர்ந்த ரெஜினா மேரி என்பவர் பேருந்து நிலையத்திற்கு ஷேர் ஆட்டோவில் சென்ற போது தங்க நகைப் பையை தவற விட்டுள்ளார்.

ஆட்டோ ஓட்டுனர் வசந்தகுமார் தனது ஆட்டோவில் இருந்த பையில் நகைகள் இருப்பதை கண்டு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அதனை ஒப்படைத்தார். விசாரணையின் முடிவில் அந்த நகைகள் ரெஜினா மேரியிடம் ஒப்படைக்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments