20 ஓவர் உலக கோப்பை தொடருக்கான ஆப்கான் அணி அறிவிப்பு ; கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ரஷீத் கான் அறிவிப்பு

0 5769
கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ரஷீத் கான் அறிவிப்பு

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக ரஷீத் கான் அறிவித்துள்ளார். அக்டோபர் மாதம் நடக்க உள்ள 20 ஓவர் உலக கோப்பை தொடருக்கான ஆப்கான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் தலைமையில் அணி அறிவிக்கப்பட்ட நிலையில், அணி தேர்வு குறித்து ஆப்கான் கிரிக்கெட் வாரியம் தன்னுடன் கலந்து ஆலோசிக்கவில்லை என்றும் தனக்கான உரிமைகள் வழங்கப்படவில்லை என்றும் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments