பெட்ரோல் பங்கில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1.70 லட்சம் கொள்ளை - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

0 2643
பெட்ரோல் பங்கில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1.70 லட்சம் கொள்ளை

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பெட்ரோல் பங்கில் கத்தியை காட்டி மிரட்டி முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

வண்ணாந்தரவை மின்துறை அலுவலகத்தின் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இரு சக்கர வாகனத்துடன் புகுந்த 3 மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களை கொண்டு ஊழியர்களை தாக்க முயன்றுள்ளனர். ஊழியர்கள் மிரண்டு தப்பியதும் கல்லாவில் இருந்த ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து தப்பி உள்ளனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்து முதற்கட்டமாக கொள்ளையர்களின் இரு சகக்ர வாகனத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments