புதிய தற்காப்பு ஏவுகணை கருவி, இந்திய விமானப் படையின் வலிமையை அதிகரிக்கும் - அமைச்சர் ராஜ்நாத்சிங்

0 2151

புதிய தற்காப்பு ஏவுகணை கருவி பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் முன்னிலையில் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டது.

70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பல்வேறு இலக்குகளைத் தாக்கி அழிக்க கூடிய பாரக் 8 ஏர் டிபென்ஸ் சிஸ்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜைசல்மேரில் முறைப்படி இந்திய விமானப்படையிடம்  ஒப்படைக்கப்பட்டது.

எதிரிகளின் ஜெட் போர் விமானங்கள், ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லாத டிரோன்கள் உள்ளிட்டவற்றை இலக்காகக் கொண்டு தாக்கக் கூடிய வலிமை மிக்க இந்த ஏவுகணைக் கருவிகள்  இந்திய விமானப்படைக்கு புதிய வலிமையைத் தருவதாக இருக்கும் என்று ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு ரஷ்யாவிடம் இருந்து விரைவில் S 400 ஏவுகணைக் கருவிகள் விரைவில் கிடைக்க உள்ளன. இவை 400 கிலோமீட்டர் தூரம் வரை எதிரியின் இலக்குகளை அழிக்கக் கூடியவை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments