விநாயகர் சதுர்த்தியொட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன...

0 1932

விநாயகர் சதுர்த்தியொட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன...

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் மணக்குள விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடியில் பழமை வாய்ந்த வரதவிநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர். 

கோயம்புத்தூர் மாவட்டம் புலியகுளத்தில் ஆடம்பர அலங்காரத்தில் தோன்றிய 190 டன் எடை கொண்ட ராட்சத முந்தி விநாயகருக்கு பல்வேறு அபிஷேகங்களுடன் கூடிய சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோவில் வாசலில் நின்றவாறு மக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் உள்ள விநாயகருக்கு தலா 30 கிலோ எடை கொண்ட 2 ராட்சத கொழுக்கட்டைகள்  படைக்கப்பட்டன.

தேங்காய், பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், நெய், பருப்பு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி இந்த ராட்சத கொழுக்கட்டைகள் தயாரிக்கபட்டன.

பின்னர்  மேளதாளத்துடன்  ராட்சத கொழுக்கட்டைகள் எடுத்துவரப்பட்டு உச்சி பிள்ளையாருக்கு படைக்கப்பட்டு, பின்னர் பிரசாதமாக வழங்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments