இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் மம்தா பானர்ஜி

0 1536

மேற்கு வங்கத்தில் பவானிபுர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்ய உள்ளார்.

 மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள பவானிபுர், ஜாங்கிபுர், சமர்கஞ்ச் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. வரும் 30ம் தேதி நடக்கும் தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள், அக்டோபர் 3 ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.

மம்தாவுக்கு எதிராகப் போட்டியிட ஆறு பேர் அடங்கிய பட்டியலை கட்சித் தலைமைக்கு, மேற்கு வங்க பா.ஜ.க, அனுப்பியுள்ளது. அதில் முன்னிலையில் இருப்பவர் பெண் வழக்கறிஞர் பிரியங்கா திப்ரேவால் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments