வினைதீர்க்கும் விநாயகன், நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டம்

0 2800

ஞான முதல்வனாம் விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. 

முழு முதற் கடவுள், வினை தீர்ப்பவர் விநாயகப் பெருமான். அவர் அவதரித்த திருநாளாக ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நான்காம் நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

அதிகாலையில் நீராடி, வீடுகள்தோறும் மாவிலைத் தோரணம் கட்டி, இலையில் புத்தரிசியைப் பரப்பி களிமண்ணால் ஆன விநாயகரை வைத்து, அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ உள்ளிட்ட பூக்களால் அலங்கரிக்கின்றனர்.

முக்கனிகளுடன், அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, கொய்யாப்பழம் போன்றவற்றைப் படையலிட்டு விநாயகரை வழிபடுகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி நாளில், உணவு எதுவும் எடுக்காமல் விரதம் இருந்து வழிபடுவோரும் உண்டு. விநாயகர் கோவில்கள் அலங்கரிக்கப்பட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

பலதரப்பட்ட மக்களும், கலாச்சாரமும் கொண்ட இந்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுவது என்பதுதான் விநாயகர் சதுர்த்தியின் தனிச்சிறப்பு....

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments