94 மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு ; தரமற்ற முறையில் மருந்து தயாரித்ததாக ஆய்வு முடிவில் அதிர்ச்சித் தகவல்

0 2028
94 மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு

தமிழகத்தில் தரமற்ற மருந்து தயாரித்ததாக 94 மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2020 ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2021 மார்ச் 31ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் உள்ள மருந்து தயாரிக்கும் நிறுவனங்களில் தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் சோதனை நடத்தியது.

அதில் மருந்து மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ததில் தமிழ்நாட்டை சேர்ந்த 30 நிறுவனங்கள் உள்ளிட்ட 94 மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தரமற்ற முறையில் மருந்து தயாரித்தது கண்டறியப்பட்டுள்ளது. அந்நிறுவனங்கள் மீது மருந்து மற்றும் அழகு சாதன சட்டம் 1940ன் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. மேலும் 6 நிறுவனங்கள் மீது போலி மருந்து தயாரித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments