குட்கா பயன்பாட்டை முழுமையாக ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1638
குட்கா பயன்பாட்டை முழுமையாக ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன

தமிழகத்தில் குட்கா பயன்பாட்டை முழுமையாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார். 

காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சமீபகாலமாக தமிழகத்தில் குட்கா பொருட்கள் அதிகமாகப் பிடிபடுவதாகவும் இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குட்கா இன்னும் இருக்கின்றது, முழுவதுமாக ஒழிக்கப்படவில்லை. குட்காவை முழுவதும் ஒழிப்பதற்கான நடவடிக்கையில் இந்த அரசு இறங்கியுள்ளது. கடந்த காலத்தில் போடப்பட்ட குட்கா வழக்குகளில், யார் யார் கையூட்டு பெற்று இருக்கின்றார்கள், யாரெல்லாம் உடந்தையாக இருந்திருக்கின்றார்கள், போலீஸ் அதிகாரிகள் தொடங்கி அமைச்சர் பெயர் வரை அதில் இடம் பெற்றுள்ளது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் மறந்து விடக்கூடாது, என முதலமைச்சர் தெரிவித்தார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments