சட்டப்பேரவையில் கொடநாடு குறித்து முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவரிடையே காரசார விவாதம்

0 2555

சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கையின்போது, கொடநாடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவரிடையே விவாதம் நடைபெற்றது.

ஜெயலலிதா அலுவல் பணிகளை மேற்கொண்ட கொடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி கேமரா கழற்றப்பட்டது எப்படி என்றும், ஆட்சிப் பொறுப்பில் இருந்த எடப்பாடி பழனிசாமி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கொடநாடு சொத்து வேறு ஒருவருக்கு சென்று விட்டதாக எடப்பாடி பழனிசாமி பதிலளித்தபோது, 4 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த நீங்கள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று மு.க.ஸ்டாலின் வினவினார்.

விசாரணைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஏன் என்று முதலமைச்சர் கேள்வி எழுப்பினார். தங்களுக்கும் அந்த வழக்கிற்கும் எவ்வித தொடர்புமில்லை என்று எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments