ஸ்பெயினின் அண்டலுஷியா மலைப் பகுதிகளில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ

0 1653

ஸ்பெயினின் அண்டலுஷியா  மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் அருகில் இருந்த கேளிக்கை விடுதியில் தங்கியிருந்த 500 பேர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

கொளுத்தும் கோடை வெயிலால் அண்டலுஷியா மலைப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் 250 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ள போதும் காற்று வேகமாக வீசுவதால் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

செங்குத்தான மலைப்பகுதிகளில் தீ பரவி வருவதால் அதனைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். ஸ்பெயினில், கடந்த 8 ஆண்டுகளாக இல்லாத வகையில் இந்தாண்டு காட்டுத்தீயின் தாக்கம் கடுமையாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments